Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  04-01-2021

இன்றைய தியானம்(Tamil)  04-01-2021

தேவன் அருளிய வேதம் 

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” – சங்கீதம் 119:97

பின்நாட்களில் சபை சீர்திருத்தவாதியாக மாறிய மார்டின்லூத்தர் ஒரு முறை பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றார். அங்கு லத்தீன் மொழியிலுள்ள ஒரு வேதாகமத்தைக் கண்டுபிடித்தார். இதுவரை சுவிசேஷ பகுதிகளான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் மட்டுமே தேவனுடைய வார்த்தை என எண்ணியிருந்தார். முழு வேதாகமத்தைப் பார்த்ததும் மிகமிக வியப்புடனும் படபடக்கும் இருதயத்தோடும் பரிசுத்த பக்கங்களை வாசித்து பரவசமடைந்தார். பின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவியேற்றபின் வேதத்தின் மகத்துவம் பற்றியும், சங்கீதம், சுவிசேஷங்கள், நிருபங்கள் என எல்லா பகுதிகளிலுமிருந்தும் பிரசங்கிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களை வல்லமையுடன் பிரசங்கித்தார். அவரின் பிரசங்கம் அநேக உள்ளங்களை கவர்ந்தது. சத்தியத்தை சத்தியமாக போதித்தார். பாவமன்னிப்புச் சீட்டை வாங்காமல் மீட்பரை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டுமென்று ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாலந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் சத்தியத்தை பரப்பினார். இதன் மூலம் லூத்தர் மிகப்பெரிய சீர்திருத்தத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். மக்கள் வேதாகமத்தை முழுமையாக முறையாக வாசிக்க ஆரம்பித்தார்கள். 

ஆம், வேத வசனமே நம் வாழ்வில் உண்மையான விடுதலையைக் கொண்டு வர முடியும். வசனமே பல மூட நம்பிக்கைகளிலிருந்தும், வீண் பயங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும். ஆனால் வேத வசனத்தை துணிகரமாய் அக்கினியில் எறிந்து போட்ட ராஜாவைக்குறித்து எரேமியா 36:23ல் வாசிக்கிறோம். அதே நேரத்தில் வேதவசனத்தை வாசிக்கக்கேட்டபோது, இருதயத்தில் குத்துண்டு தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு மனந்திரும்பியவர்களும் உண்டு.

அருமையானவர்களே! நாம் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். இப்புதிய ஆண்டிலே வேதத்தை முறையாக கவனமாக வாசித்து தியானிக்க தீர்மானிப்போம். நாம் சில புத்தகங்களை ருசிபார்க்க வேண்டும், சில புத்தகங்களை அப்படியே விழுங்க வேண்டும். வேதாகமத்தையோ மெதுவாக மென்று மென்று சுவைத்து அசைபோட்டு ஜீரணிக்க வேண்டும். நிச்சயமாய் வேத வசனங்கள் நமக்கு வழிகாட்டும். ஆலோசனை கூறும், ஆறுதல் படுத்தும், நம்பிக்கை தரும், பயங்களை போக்கும் நித்திய ஜீவனுக்கு நேராய் வழிநடத்தும். இன்று நீங்கள் தொடங்கியுள்ள வேதாகம பயணம் வருடம் முழுவதும் தொடர வாழ்த்துகிறேன். 
-    Mrs. சரோஜா மோகன்தாஸ் 

ஜெபக்குறிப்பு:
You tube, WhatsApp, Twitter போன்ற சமூக வலைதளங்களில் வெளிவரும் தினதியான இதழ் இன்னும் அநேக புதிய நபர்களுக்கு சென்றடைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)